உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

புதுச்சத்திரம் : புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சத்திரம் அடுத்த பெரியக்குப்பத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி, 30; இவர் தனது வீட்டில் புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக புதுச்சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 10 பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து தண்டபாணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை