| ADDED : ஜூலை 30, 2024 11:30 PM
பெண்ணாடம் அடுத்த கிளிமங்கலம் - முருகன்குடி இடையே வெள்ளாற்றின் மீது, 11 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக உயர் மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த 2014ல் போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பாலத்தைப் பயன்படுத்தி கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, மோசட்டை, குறுக்கத்தஞ்சேரி, பாசிக்குளம், பெலாந்துறை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி உட்பட பல பகுதிகளுக்கு செல்கின்றனர்.போக்குவரத்து வசதிக்காக பாலத்தின் இருபுறமும் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டது. ஓரிரு மாதங்கள் மட்டுமே எரிந்த நிலையில் சமூக விரோதிகள் சோலார் விளக்குகள், பேட்டரிகளை திருடிச் சென்றதால் மேம்பாலம் முழுவதும் இருளில் மூழ்கியதால் இரவு நேரங்களில் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொது மக்கள் அச்சமடைகின்றனர்.