ஓய்வுபெற்ற ஆசிரியர் வீட்டில் திருட்டு
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பெண்ணாடம், சவுந்திரசோழபுரம் சாலையைச் சேர்ந்தவர் இளங்கோவன், 70. ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் இரவு தனது மனைவி, மகனுடன் அருகிலுள்ள மற்றொரு வீட்டில் துாங்கச் சென்றார்.நேற்று காலை 7:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு, உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த 4 ஆயிரம் பணம் திருடுபோனது தெரிந்தது.புகாரின்பேரில், பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.