உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேட்பாளர் அறிமுக கூட்டம் வி.சி., கட்சியினர் அடிதடி

வேட்பாளர் அறிமுக கூட்டம் வி.சி., கட்சியினர் அடிதடி

திட்டக்குடி:கடலுார் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் அறிமுகக்கூட்டம், திட்டக்குடி அடுத்த கீழ்செருவாய் கிராமத்தில் நடந்தது. அப்போது மேடையில் இருந்த வி.சி., மாவட்ட செயலர் திராவிடமணி, முன்னாள் மாவட்ட செயலர் தமிழன்பன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இரு கோஷ்டியினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அமைச்சர் கணேசன் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அமர வைத்தார். இரவு 7:40 மணிக்கு கூட்டம் முடிந்து நிர்வாகிகள் புறப்படும் நேரத்தில், வி.சி., கட்சியைச் சேர்ந்த சிலர் முன்னாள் மாவட்ட செயலர் தமிழன்பன் மீது சேர்களை வீசி தாக்கினர்.அதில், தமிழன்பன் மற்றும் அவரது ஆதர வாளர்கள் மூன்று பேர் காயமடைந்தனர். மூவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ