உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓய்வு பெற்ற ஊழியருக்கு மிரட்டல் என்.எல்.சி., அதிகாரி மீது வழக்கு

ஓய்வு பெற்ற ஊழியருக்கு மிரட்டல் என்.எல்.சி., அதிகாரி மீது வழக்கு

நெய்வேலி, : ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியரை மிரட்டிய, அதிகாரி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 22 ஐ சேர்ந்தவர் மகாலிங்கம், 66; என்.எல்.சி., முதலாவது அனல்மின் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரிடம், என்.எல்.சி., இரண்டாம் அனல் நிலைய விரிவாக்கத்தில் கூடுதல் முதன்மை மேலாளராக பணியாற்றி வரும் வட்டம் 27 யை சேர்ந்த குழந்தைவேல். 55; என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடனாக வாங்கியிருந்தார்.கடனாக வாங்கிய பணத்தை மகாலிங்கத்திற்கு தராமல் குழந்தைவேல் ஏமாற்றி வந்துள்ளார். மேலும், இனியும் பணம் கேட்டு தொந்தரவு செய்தால் கொலை செய்து விடுவேன் என, மகாலிங்கத்தை மிரட்டியுள்ளார்.இதுகுறித்து மகாலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் என்.எல்.சி., அதிகாரி குழந்தைவேல்மீது டவுன்ஷிப் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை