உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / எஸ்.எஸ்.ஐ., தாக்கு தம்பதி மீது வழக்கு

எஸ்.எஸ்.ஐ., தாக்கு தம்பதி மீது வழக்கு

வடலுார் : வடலுார் அருகே எஸ்.எஸ்.ஐ.,யை தாக்கிய கணவன் மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.வடலுார் அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ஞானசேகரன், 53 ; இவர் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ., யாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஞானசேகரன் பணி முடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பாச்சாரப்பாளையம் வாட்டர் டேங்க் அருகில் வந்தபோது, எதிரே, வந்த கார் இவர் மீது மோதுவது போல் வந்துள்ளது.அப்போது, காரை ஓட்டி வந்த பாச்சாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அருள்முருகனிடம், ஓரமாக ஒதுங்கிப் போகும்படி எஸ்.எஸ்.ஐ., ஞானசேகரன் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அருள்முருகன் மற்றும் அவரது மனைவி இருவரும் சேர்ந்து ஞானசேகரனை தாக்கினர். இது குறித்து ஞானசேகரன் புகாரின் பேரில், வடலுார் போலீசார் அருள்முருகன் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை