உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

சிதம்பரம்: சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, முன்னாள் மாணவர்கள் சார்பில் 1 லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு மொத்தம் 1 லட்சம் ரூபாய் மதிப்பில், ரொக்கப் பரிசு தொகை வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயராமன் தலைமை தாங்கி, ரொக்க பரிசுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் டாக்டர் பரசுராமன், டாக்டர் அருள்ஜோதி, தொழிலதிபர் ஹாஜா செரீப்சிவி, விஜயகாந்த், பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி