உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றுதல்

துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கவசம் சாற்றுதல்

மந்தாரக்குப்பம், - மந்தாரக்குப்பம் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது.மந்தாரக்குப்பம் கடைவீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோவில் உள்ள துர்க்கை அம்மனுக்கு வெள்ளி கவசம் நேற்று காலை அணிவிக்கப்பட்டது. முன்னதாக வெள்ளி கவசம் யாகசாலை பூஜையில் வைக்கப்பட்டு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் வெள்ளி கவசங்களுடன் கோவிலை சுற்றி வந்து வழிபாடு செய்து துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கவசங்களை அணிவித்தனர். துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை புவனேஸ்வரி அம்மன் ஆலய பரிபாலன சபை, துர்க்கா வார வழிப்பாட்டுக்குழுவினர், புவனேஸ்வரி அம்மன் ஆலய அன்னதான குழு, பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ