| ADDED : ஆக 11, 2024 05:57 AM
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடலுார் குறுவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது.துவக்க நிகழ்ச்சிக்கு குறுவட்ட செயலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சந்தோஷம் ஆறுமுகம், குறுவட்ட விளையாட்டு போட்டி இணை செயலாளர்கள் திருவிக்ரமன், அருள்செல்வன் முன்னிலை வகித்தனர். கடலுார் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் போட்டிகளை துவக்கி வைத்தார்.துவக்கநாளில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகள் வரும் 30ம் தேதி வரை நடக்கிறது. இதில் 14 வயதிற்குட்பட்டோர், 17 வயதிற்குட்பட்டோர், 19 வயதிற்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இதில் 39 பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கின்றனர்.