உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தடகள பயிற்சி முகாம் மாணவர்களுக்கு சான்றிதழ்

தடகள பயிற்சி முகாம் மாணவர்களுக்கு சான்றிதழ்

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் கோடைகால தடகள பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.கடலுார் மாவட்ட தடகள கழகம் சார்பில் அண்ணா விளையாட்டரங்கில் கோடை கால தடகள விளையாட்டு சிறப்பு பயிற்சி முகாம் 15 நாட்கள் நடந்தது. முகாமில், 90 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு பயிற்சியாளர்கள் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி பயிற்சி அளித்தனர்.முகாம் நிறைவு விழாவில், மாவட்ட விளையாட்டு அதிகாரி மகேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இந்திய ேஹண்ட் பால் மகளிரணி பயிற்சியாளர் கார்த்திகேயன், முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.ஏற்பாடுகளை மாவட்ட தடகள கழகத் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், இணைச் செயலாளர் பாபு, மூத்த விளையாட்டு வீரர் ரஞ்சித் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ