உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா 

ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா 

கடலுார்: கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவத்தில் தேர்த் திருவிழா நடந்தது.கடலுார், முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் செடல் உற்சவம் கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேகம், வீதியுலா நடந்தது. 9ம் நாள் விழாவான செடல் உற்சவம் கடந்த 2ம் தேதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளச் செய்து தேர்த் திருவிழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை