உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி பூஜை

நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் சதுர்த்தி பூஜை

நெய்வேலி: நெய்வேலி சப்த விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள அண்ணா கிராமத்தில் சப்த விநாயகர் கோவில் உள்ளது. இங்கு ஏழு விநாயக சுவாமி அருள்பாலித்து வருகின்றனர். காஞ்சி மகா பெரியவர் ஆசீர்வாதத்துடன் நிர்மாணிக்கப்பட்ட சப்த விநாயகர் மற்றும் மஹா பெரியவர் விக்ரகம் அமைந்துள்ள. இக்கோவில் காஞ்சி மடம் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.இந்த கோவிலில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி அன்று ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனை பிரசாத விநியோகம் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் இங்குள்ள ஏழு விநாயகர்களுக்கும் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும், மகா பெரியவர் சந்திரசேகரந்திர சரஸ்வதி சுவாமிகள் திருஉருவ சிலைக்கும் மாதாந்திர அனுஷ்திற்கு காலையில் ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ