உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோணாங்குப்பத்தில் முதல்வர் திட்ட முகாம்

கோணாங்குப்பத்தில் முதல்வர் திட்ட முகாம்

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த கோணாங்குப்பத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கிராம மக்களிடம் மனுக்கள் பெற்றார்.நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை கொளஞ்சி, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் சாந்தி மதியழகன் முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் பரமேஸ்வரி மோகன் வரவேற்றார்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கினார். முகாமில், எம்.பரூர், எடச்சித்துார், எம்.புதுார், எம்.பட்டி, தொட்டிக்குப்பம் ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்கள் வருவாய், ஊரக வளர்ச்சி, வேளாண், சுகாதாரம், தொழிலாளர் நலன் உட்பட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர்.பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மணிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் மலர்கொடி பரமகுரு, நீலாவதி செம்பை, ஊராட்சி தலைவர்கள் ஜெகப்பிரியா, சுப்ரமணியன், அண்ணாதுரை, கீதா, செல்வராணி, நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், திருஞானம், காங்., ராவணன், ரஞ்சித்குமார், ஜெய்சங்கர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ