உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு, குமளங்குளம், சி.என்.பாளையம் ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நேற்று நடுவீரப்பட்டு கிருஷ்ணசாமி மண்டபத்தில் நடந்தது.தாசில்தார் பலராமன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் வீரமணி, பார்த்திபன், தி.மு.க., கடலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பரமணியன் முன்னிலை வகித்தனர். முகாமில், நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் ஊராட்சிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர்.நிகழ்ச்சியில் தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் ஞானசேரகன், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாயசங்க தலைவர் வைத்திலிங்கம், ஊராட்சி தலைவர்கள் நடுவீரப்பட்டு சந்தோஷம் ஆறுமுகம், குமளங்குளம் ஜெயலட்சுமி ராஜபாஸ்கர்,சி. என்.பாளையம் மங்களம் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுதாகர், ராஜாராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி