உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காலநிலை மாற்றம்:கடலுாரில் கருத்தரங்கம்

காலநிலை மாற்றம்:கடலுாரில் கருத்தரங்கம்

கடலுார்: கடலுாரில் தமிழக பெண்கள் இயக்கம் சார்பில் காலநிலை மாற்றமும் கிராம பெண்களும் என்ற தலைப்பில் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.ஒருங்கிணைப்பாளர் வசந்தா தலைமை தாங்கினார். அமைப்பாளர் கில்பர்ட்,செங்கல்பட்டு ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில்,காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பயிர் பாதிப்பு, வறட்சி குறித்தும், வேலை வாய்ப்பு, கால்நடைகளுக்கு தீவனம் பற்றாக்குறை ஏற்படுவது, நோய் பாதிப்பு உள்ளிட்டவை குறித்து கிராமப்புற பெண்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் அருள் செல்வம் கால நிலை மாற்றம் குறித்து கருத்துரையாற்றினார்.அப்போது, பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ