மேலும் செய்திகள்
நடமாடும் கால்நடை மருத்துவ வாகன சேவை தொடக்கம்
28-Aug-2024
கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை வாகனம் துவக்க விழா நடந்தது.கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி, வாகனத்தை துவக்கி வைத்தார். கடலுார் மாவட்டத்தில் தேசிய விலங்குகள் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதுார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 6 நடமாடும் மருத்துவ சேவை வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு கால்நடை டாக்டர், ஒரு கால்நடை உதவியாளர் மற்றும் டிரைவர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாகனங்கள் மூலம் காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்படும். அவசர சிகிச்சை தேவைப்படுவோர் 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்ந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.அப்போது, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
28-Aug-2024