வி.இ.டி., பள்ளியில் கூட்டு பிரார்த்தனை
விருத்தாசலம்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் நுாறு சதவீத தேர்ச்சி பெற வேண்டி, வி.இ.டி., மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தில் நாளை பிளஸ் 2 தேர்வும், 5ம் தேதி பிளஸ் 1 தேர்வு, வரும் 28 ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. பொதுத்தேர்வு எழுதும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டி, விருத்தாசலம் எருமனுார் வி.இ.டி., மேல்நிலை பள்ளியில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற வடிவில் நின்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.கல்வி குழும தலைவர் பத்மாவதி தலைமை தாங்கினார். பொருளாளர் கீர்த்திகா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரபாகரன் வரவேற்றார். செயலர் இந்திரா வாழ்த்தி பேசினார். உதவி தலைமை ஆசிரியர்கள் மோகன்ராஜ், சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் பாலாஜி ஏற்பாடுகளை செய்திருந்தார்.