உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கல்

ஜமாபந்தியில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கல்

கடலுார், : வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் அருண் தம்புராஜ் பொதுமக்களிடமிருந்து, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம், ரேஷன் அட்டை, பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றார்.பின், 5 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, 67 பேருக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மாதம் 2,000 ரூபாய் பராமரிப்பு உதவித் தொகைக்கான ஆணை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை