உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கலெக்டர் ஆய்வு

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கலெக்டர் ஆய்வு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்லக்கூடிய சாமியார்பேட்டை கடற்கரை ,பிச்சாவரம் உள்ளிட்ட இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் உள்ள சாமியார்பேட்டை, பிச்சாவரம் ஆகிய பகுதிகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார்ஆய்வு மேற்கொண்டார்.இப்பகுதிகளுக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகளின் வருகை குறித்தும், அவர்களின் தேவைகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களைகலெக்டர் பார்வையிட்டார்.தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகட்டடம் மற்றும் நபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் கட்டடங்களை கலெக்டர் ஆய்வு செய்தார். கடந்த ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்து, மேலும் வரும் ஆண்டில் மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர் மற்றும்ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து அன்னங்கோயில் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டார். பின்னர் பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு பூங்காவைபயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை