உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கள்ளு வியாபாரி மீது தனிப்பிரிவுக்கு கரிசனம்

கள்ளு வியாபாரி மீது தனிப்பிரிவுக்கு கரிசனம்

விருத்தகிரீஸ்வரர் குடிகொண்ட நகரையொட்டி பகுதியில் கள் விற்பனை நடந்து வந்தது. கள்ளு விற்பனைக்கு அரசு தடை உள்ள நிலையில், போலீஸ் ஆதரவுடன் விற்பனை நடந்து வந்தது. இதுகுறித்து எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில், சமீபத்தில், எஸ்.பி., தனிப்படையினர். கள்ளு வியாபாரியை கையும் களவுமாக பிடித்து, 26 குடங்களில் இருந்த 300 லிட்டர் கள்ளு மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.இந்நிலையில், தனிப்பிரிவு ஏட்டு ஒருவர், எஸ்.பி., தனிப்படை போலீசாரை தொடர்பு கொண்டு, டாடா ஏஸ் வாகனம் மற்றும் பறிமுதல் செய்த கள்ளை குறைத்து காட்டி வழக்கு பதிவு செய்யுமாறு கெஞ்சியுள்ளார்.இந்த விஷயம் காட்டுத்தீயாய் பரவியதால், வேறு வழியின்றி, 300 லிட்டர் கள்ளு மற்றும் டாடா ஏஸ் வாகனத்தை பறிமுதல்செய்ததாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கள்ளு வியாபாரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி