உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மோடி உருவ படத்தை எரித்து கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம் 

மோடி உருவ படத்தை எரித்து கடலுாரில் காங்., ஆர்ப்பாட்டம் 

கடலுார: கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய மாவட்ட காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்டத் தலைவர் திலகர் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் குமார், கிஷோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மணி, சுந்தரமூர்த்தி, முகமது ஷபி, ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரன், வட்டாரத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், அலெக்சாண்டர், ராஜா, சாந்தி நகர தலைவர்கள் ரவிக்குமார், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.லோக்சபாவில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலை ஜாதி பெயரை கூறி இழிவுப்படுத்தியதை கண்டித்து பிரதமர் மோடி உருவ படத்தை காங்., கட்சியினர் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம்

பாலக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர்கள் ரஞ்சித்குமார், ஸ்டீபன், வேல்முருகன், கந்தசாமி, வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன், ராமச்சந்திரன், முருகானந்தம், பரமசிவம், சுரேஷ், இளைஞர் காங்., ஜெயசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.அதில், முன்னாள் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ஜாதி பெயர் தெரியாதவர்கள் எல்லாம் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேசுகிறார்கள் என லோக்சபாவில் ராகுல்காந்தி எம்.பி.,யை ஜனநாயக மரபுக்கு எதிராக தரக்குறைவாக பேசியதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ