உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரையேறவிட்டகுப்பத்தில் அப்பர் சிலை பிரதிஷ்டை

கரையேறவிட்டகுப்பத்தில் அப்பர் சிலை பிரதிஷ்டை

கடலுார்: கடலுார் அருகே அப்பர் கரையேறிய, கரையேறவிட்ட குப்பம் கோவிலில், அவரது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.தமிழகத்தை ஆண்ட மகேந்திரவர்ம பல்லவ மன்னர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் அடிகளாரை கருங்கல்லில் கட்டி, கடலில் வீசினார். அப்போது நமச்சிவாய பதிகம் பாடி, அந்த கல்லையே தெப்பமாக கொண்டு அப்பர் கரை சேர்ந்ததாக வரலாறு. கடலுார் புதுவண்டிபாளையம் கரையேறவிட்டக்குப்பம் என்ற இடத்தில் அப்பர் கரையேறியதால், அந்த இடத்தில் அப்பருக்கு கோவில் சிறிய அளவில் அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இக்கோவில் தனியார் உதவியுடன், பிரமாண்டமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதையொட்டி, கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 1.5 டன் எடையுள்ள அப்பர் சிலை, கல்லால் ஆன கயிறு சுற்றப்பட்டது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. அப்போது கிரேன் மூலம் அப்பர் கரையறிய குளத்தில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ