உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கட்டுமானம், மனைத்தொழில் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் தலைமை தபால் நிலையம் அருகில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில்கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில துணைச் செயலாளர் பாபு, கடலுார் மண்டல தலைவர் செந்தமிழ்கொற்றவன்தலைமை தாங்கினர். மாவட்ட தலைவர்கள் செந்தில்வேல், சக்திவேல், ரவீந்திரன் முன்னிலை வகித்தனர். இதில், கட்டுமான தொழிலுக்கான ஜி.எஸ்.டி., வரியை 15சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விலக்கிற்கானவரி வரம்பை 20 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய, மாநிலஅரசுகள் கட்டுமான துறைக்கென தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.அப்போது, மண்டல செயலாளர் ஜெயராமன், மண்டல பொருளாளர் அருள், மண்டலதுணைத் தலைவர்கள் கணேசமூர்த்தி, முருகேசன், மாவட்ட பொருளாளர் குமார்,மாவட்ட செயலாளர்கள் தங்கபாண்டியன், ஜோதிவேல், பொருளாளர்கள்வேல்முருகன், ராஜராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை