மாசி மக ஊர்வலம் குறித்த ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரம் மாசி மகத்தையொட்டி, சுவாமி ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து கிராம முக்கியஸ்தர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.சிதம்பரம், அண்ணாமலை நகர் காவல் நிலைய வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் தலைமை தாங்கி வழிமுறைகள் குறித்து பேசுகையில், 'மாமி மக ஊர்வலத்தின் போது, இளைஞர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் ஈடுபடாமலும், மது போதையில் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமலும் ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற விழா அமைப்பாளர்கள் பொறுப்பேற்க வேண்டும்' என்றார்.சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன், புருஷோத்தமன், தலைமைக் காவலர் ஆனந்த்பாபு மற்றும் கீழகுண்டலபாடி, பிச்சாவரம் காடுவெட்டி, கனகரப்பட்டு, கடவாச்சேரி, வல்லத்துறை,சின்னகார மேடு, அம்பிகாபுரம், தெற்கு தில்லைநாயகபுரம், கூத்தன் கோவில், நடராஜபுரம், குமாரமங்கலம் பகுதிகளில் இருந்து ஊர் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.