உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தரையில் ஊர்ந்து சென்று தாசில்தாரிடம் மனு

தரையில் ஊர்ந்து சென்று தாசில்தாரிடம் மனு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ஜமீன் வாரிசு என அருள்வாக்கு கூறிய நபர், பாம்புபோல தரையில் ஊர்ந்து சென்று மனு கொடுத்ததால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தாலுகா அலுவலகத்திற்கு நேற்று மாலை 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். அவர், தாசில்தார் அலுவலக வாயிலில் அமர்ந்து, அருள்வாக்கு கூறினார். அப்போது, நடியப்பட்டு ஜமீன்தார் முத்துநாயக்கர் பேசுகிறேன். நடியப்பட்டு அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கணக்கில் இல்லாத எங்கள் சொத்துக்களை பட்டா போட்டு விட்டனர்.எனக்கு சொந்தமான இடத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உடனடியாக அந்த இடத்தை எங்களிடம் தராவிட்டால், ஒரு மாதத்தில் ஊருக்குள் ஏதாவது நடக்கும். எங்கள் ஜமீனுக்கு சொந்தமான வாள், கத்தி ஆகியவற்றை யாரோ எடுத்து வைத்துள்ளனர். பின், தரையில் ஊர்ந்தபடி, பாம்புபோல சப்தம் எழுப்பியவாறு சென்றார். அவரை, தாசில்தாரிடம் அழைத்துச் சென்றனர்.அந்த நபர், நடியப்பட்டு ஜமீன்தார் முத்துநாயக்கர் வாரிசு காட்டுராஜா, ஜெயலட்சுமி மகன் ஜெயக்குமார் எனக் கூறி தாசில்தார் உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் கூறியதை ஏற்று, அங்கிருந்து சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை