உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்

சித்ரா பவுர்ணமியால் சில்வர் பீச்சில் கூட்டம்

கடலுார் : சித்ரா பவுர்ணமியொட்டி கடலுார் சில்வர் பீச்சில் பொதுமக்கள் குடும்பத்துடன் கூடி நிலாச் சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.சித்ரா பவுர்ணமியொட்டி கோவில்கள், கடற்கரைகள், ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் குடும்பத்துடன் அமர்ந்து சமைத்த உணவை அனைவருக்கும் பரிமாறி உண்ணுவது வழக்கம். அந்த வகையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று கடலுார் சில்வர் பீச்சில் மாலை முதலே பொதுமக்கள் குவிய துவங்கினர். கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தனர். சிறுவர்கள் முதல், பெரியவர்கள் வரை கடலில் குளித்து, கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர். நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் கூடியது. பின், அனைவரும் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ