உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி பணியில் சாதனை படைக்கும் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளிகள்

கல்வி பணியில் சாதனை படைக்கும் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளிகள்

கல்வி பணியில் கடலுார் லட்சுமி சோரடியா பள்ளிகள் சாதனை படைத்து வருகிறது என, அதன் தாளாளர் மாவீர்மல் சோரடியா கூறினார். அவர் கூறியதாவது:கடலுார், திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர்., நகர் லட்சுமி சோரடியா பள்ளி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுகிறது. பள்ளி முதல்வர் சந்தோஷ்மல் சோரடியா, துணை முதல்வர் பத்தாகான் ஆகியோர் ஒருங்கிணைந்து பள்ளியை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் சிறந்த கல்வி கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவிகளையும் சிறந்த மருத்துவராக, இன்ஜினியராக அரசுப் பணிக்கு ஏற்றவர்களாக உருவாக்குவதே பள்ளியின் நோக்கம்.10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தி, மாவட்ட, மாநில அளவில் முதலிடம் பெற சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. அனைத்து பகுதிகளுக்கும் பஸ் வசதி உள்ளது.கணினி வகுப்புகள், அறிவியல் ஆய்வகங்கள், நுாலக வசதிகள் உள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவி தேவசேனா 600க்கு 575 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். ரோபாட்டிக்கல், சிலம்பம், செஸ், பரதநாட்டியம், அபாகஸ், கீ- போர்டு போன்ற வகுப்புகள் நடத்தப்படுகிறது.நிறுவனத்தின் மற்றொரு கல்வி நிறுவனமாக திருப்பாதிரிப்புலியூர் பாபுராவ் தெருவில் ஸ்ரீலட்சுமி சோரடியா பள்ளி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 மாணவர் ரோகன், பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.எஸ்.எஸ்.ஆர்., நகரில் புதியதாக உருவாகியுள்ள போடார் ஜம்போ கிட்ஸ் பிளஸ் விளையாட்டு பள்ளியில் 2 முதல், 6 வயது வரையிலான மழலைகளுக்கு சிறந்த முறையில் கல்வி பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை