உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சைபர் கிரைம் போலீசார் பூதம்பாடியில் விழிப்புணர்வு

சைபர் கிரைம் போலீசார் பூதம்பாடியில் விழிப்புணர்வு

கடலுார்: குறிஞ்சிப்பாடி அருகே பூதம்பாடியில், சைபர் கிரைம் போலீசார், நல்லுறவு மேம்படுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் பிரிவு சார்பில் சைபர் கிரைம் குறித்தும் பொதுமக்கள் போலீசார் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.ஏ.டி.எஸ்.பி., பிரபாகரன் தலைமை தாங்கினார். பூதம்பாடி மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சைபர் கிரைம் குறித்து இணைய வழி குற்றங்கள், சமூக வலை தளங்களில் நடக்கும் குற்றங்கள், போலி ஆப் மூலம் பெறும் கடன்கள், போலி வேலை வாய்ப்பு குற்றங்கள், வங்கி கணக்குகளில் நடைபெறும் மோசடிகள் குறித்து கூடுதல்எஸ்.பி., பிரபாகரன் விளக்கி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் போலீசார் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வீடுகள் தோறும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ