உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பிரதிஷ்டை நாள் உற்சவம்

பிரதிஷ்டை நாள் உற்சவம்

கடலுார்; கடலுார் திருவந்திபுரம் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவிலில், மார்ச் 2ம் தேதி திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் துவங்குகிறது.கடலுார் திருவந்திபுரத்தில் சீனிவாச பெருமாள் கிடாம்பி ஆச்சான் கோவில் அமைந்துள்ளது. இங்கு, திருப்பிரதிஷ்டை நாள் உற்சவம் மார்ச் 2 ம் தேதி துவங்கி, 6ம் தேதி வரை நடக்கிறது. தினமும் சிறப்பு ஹோமம் சகஸ்ரநாம அர்ச்சனை, திவ்யபிரபந்த சேவை நடக்கிறது. மார்ச் 2ம் தேதி திருக்கல்யாண உற்சவம், மார்ச் 6 ம் தேதி காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. உற்சவ தினங்களில் காலை மற்றும் மாலை வேளையில் வேதபாராயணம், திவ்ய பிரபந்த சேவை சாற்றுமுறை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ