உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்...

பெண்ணாடம், : பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து, பெண்ணாடம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் வீரப்பன் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., அணி மாவட்ட பொருப்பாளர் பழனிசாமி, துணை தலைவர் சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் சின்னப்பன் முன்னிலை வகித்தனர். சரவணன் வரவேற்றார். நிர்வாகிகள் சின்னத்துரை, பிரகாஷ், சவுந்திரராஜன், செல்வம், வெற்றிவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.இதில், காங்., மாநில தலைவர் செல்வபெருந்தையை அவதுாறாக பேசிய பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.கதிர்வேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ