உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டியில் ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி : பண்ருட்டி இந்துமக்கள் கட்சி சார்பில், திருவதிகை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் திருப்பணி துவங்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தேவா தலைமை தாங்கினார். நகர தலைவர் நித்தியானந்தம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பூக்கடை கார்த்திக் பேசினார். ஆன்மிக பேரவை மாநில தலைவர் சக்திவேல், மாவட்ட தலைவர் செந்தில்முருகன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் பாலசந்தர், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், சித்தர் பேரவை மாவட்ட செயலாளர் சரவணன் அண்ணாகிராமம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை