உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அமைச்சர் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சி சார்பில் வேளாண்துறை அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கெங்கைகொண்டான் பேரூராட்சி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். துணை சேர்மன் பெலிக்ஸ் முன்னிலை வகித்தனர். அதில் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த நாளையொட்டி பேரூராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அரிசி, காய்கறிகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. கவுன்சிலர்கள் வேல்முருகன், பெனாசீர் அப்பாஸ், தீன்முகமது, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி, உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ