| ADDED : ஜூன் 20, 2024 08:45 PM
கடலுார் : கடலுார் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், சேர்மன் திருமாறன் தலைமையில் நடந்தது.மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்தில், துணைத் தலைவர் ரிஸ்வானா பர்வீன், ஊராட்சி செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தனர். முத்துக்கிருஷ்ணன், செல்வி, சக்தி விநாயகம் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பங்கேற்று, தங்களின் வார்டு பிரச்னை தொடர்பாக கோரிக்கை வைத்தனர்.குறிப்பாக, கடலுாரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனையை மாவட்ட தலைநகரில் அமைக்க வேண்டும். கடலுாரில் கஞ்சா, குட்கா பொருட்களை ஒழிக்க தனி குழு அமைக்க வேண்டும், . விடுபட்ட அனைவருக்கும் முதியோர் மற்றும் விதவை உதவி தொகை வழங்க வேண்டும், மேல்புவனகிரியில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நல்லுார் பகுதியில் சிப்காட் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய புதிய திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் தெரியப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.