உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெய்வீக பக்தர்கள் பேரவை அன்னதானம்

தெய்வீக பக்தர்கள் பேரவை அன்னதானம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆனி திருமஞ்சன தரிசன விழாவில், தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனிதிருமஞ்சன தரிசன விழாவில், பல்வேறு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என நான்கு வீதிகளில் பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கப்படும். அதன்படி நேற்று நடந்த தரிசன விழாவில், கிழக்கு கோபுர வாயில் அருகே, தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி ராதா தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.மாநில துணைத் தலைவர் சம்மந்த மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செல்வகுமார், வேல்முருகன், ரகோத்தமன் செந்தில்குமார், சிவா ஹரிவாசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை