உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தே.மு.தி.க., கண்டன ஆர்ப்பாட்டம்

தே.மு.தி.க., கண்டன ஆர்ப்பாட்டம்

கடலுார் : தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தே.மு.தி.க., சார்பில் கடலுாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலுார் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை கண்டித்தும், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கத் தவறிய, தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நேற்று நடந்தது. கடலுார் வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் உமாநாத் வரவேற்றார். மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலியைக் கண்டித்தும், தி.மு.க., அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.நிகழ்ச்சியில் மாவட்டத் அவைத் தலைவர் ராஜாராம், பொருளாளர் ராஜி, தென்னவன், பாலு, துணைத் தலைவர்கள் சித்தநாதன், பானுசந்தர், மாநகர செயலாளர் சரவணன், ராஜவன்னியன், ஒன்றியக்குழு துணை சேர்மன் அய்யனார், சந்திரகுமார், ரவி, அசோக்ராஜ், இளம்பரிதி, ராஜமாணிக்கம், செல்வகுமார், ஞானபண்டிதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை