உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வெயில் தாக்கம் எதிரொலி; கடலுாரில் நிழல் பந்தல்

வெயில் தாக்கம் எதிரொலி; கடலுாரில் நிழல் பந்தல்

கடலுார்: கடலுார், திருப்பாதிரிப்புலியூரில் வெயிலின் தாக்கம் எதிரொலியாக, பொதுமக்கள் வசதிக்காக, லாரன்ஸ் ரோட்டில் நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.கடலுார் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பாகவே வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலையில் துவங்கும் புழுக்கம் இரவு வரை நீடிக்கிறது. அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகளில் கானல் நீர் காணப்படுகிறது. பொதுமக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, முதியவர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், குளிர்பானம், நுங்கு, தர்ப்பூசணி மற்றும் பழச்சாறு சாப்பிடுகின்றனர். கடலுார், திருப்பாதிரிப்புலியூர் லாரன்ஸ்ரோட்டில் வியாபாரிகள் சார்பில் தற்காலிகமாக பச்சை நிற துணி நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை