உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவி தொகையை துணைவேந்தர் கதிரேசன் வழங்கினார்.அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா டீம் - சியாட்டில் குழு, அமெரிக்கா சார்பில் பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 பழங்குடி மாணவிகளுக்கு 6.25 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை, பழங்குடியின பள்ளி மேம்பாட்டிற்காக 9 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 201 மாணவிகளுக்கு கணினி பயிற்சிக்காக 8.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், புறாவிளைமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் இயற்கை மற்றும் யோகா இரண்டாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின மாணவி சபினாவிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ