உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்மோட்டார் ஒயர் திருட்டியவர் கைது

மின்மோட்டார் ஒயர் திருட்டியவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே குடிநீர் மின் மோட்டார் ஒயரை திருடிய வாலிபரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.விருத்தாசலம் அடுத்த இளங்கியனுார் கிராமத்தில் உள்ள மணிமுக்தாற்றில், நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் மின் மோட்டார் ஒயரை திருடி அதனை தீயிட்டு எரித்துள்ளார்.இதைப்பார்த்த கிராம மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து மங்க லம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அதன்பின், போலீசார் அவந்த வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் வேப்பூர் அடுத்த கீரம்பூர் காலனி, கிழக்கு தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜ்குமார், 28, என்பது தெரிய வந்தது.மேலும், அவர் இளங்கியனுார் ஊராட்சிக்கு சொந்தமாக குடிநீர் மோட்டாரில் இருந்த மின் ஒயரை திருடியது கண்டுபிடிக்கப் பட்டது.இதுகுறித்து இளங்கியனுார் ஊராட்சி செயலர் செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து ராஜ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை