உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காற்றில் மின் கம்பம் விழுந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு

காற்றில் மின் கம்பம் விழுந்து கடலுாரில் போக்குவரத்து பாதிப்பு

கடலுார்: கடலுாரில் சென்டர் மீடியனில் இருந்த மின் கம்பம் காற்றில் முறிந்து விழுந்து, பிரதான சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கடலுார் பாரதி ரோடு சென்டர் மீடியனில் மாநகராட்சி தெரு விளக்கு மின் கம்பம் பழுதடைந்திருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5:30 மணிக்கு பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது வீசிய காற்றில் பாரதி ரோடு முனையில் இருந்த மூன்று மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மின் கம்பத்தில் மின்சாரம் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாரதி சாலையில் போக்குவரத்தை தடை செய்தனர். மாநகராட்சி மின்பிரிவு ஊழியர்கள் கம்பத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. அதையடுத்து, மின்கம்பங்கள் அப்புறப்படுத்திய பிறகு, 1 மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ