உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆலத்தியூரில் கண் பரிசோதனை முகாம்

ஆலத்தியூரில் கண் பரிசோதனை முகாம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த ஆலத்தியூர் ராம்கோ சிமென்ட் நிறுவனம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.ஆலையின் துணைத் தலைவர் (உற்பத்தி) மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்தார். மூத்த பொது மேலாளர் ஞானமுருகன் முன்னிலை வகித்தார். ஆதனகுறிச்சி ஊராட்சி தலைவர் ஆசைபிரபு, மக்கள் தொடர்பு அலுவலர், ராம்கோ சமூக சேவை கழகம் மற்றும் ஆலை அதிகாரிகள், தொழிலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அரவிந்த் கண் மருத்துவமனை குழுவினர் பொது மக்களுக்கு கண் புரை, கிட்டப்பார்வை, துாரப்பார்வை, கருவிழி உள்ளிட்ட கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து, சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை