உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கண்ணன் மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆலோசனை முகாம்

கண்ணன் மருத்துவமனையில் கருத்தரிப்பு ஆலோசனை முகாம்

கடலுார் : குழந்தையின்மை தம்பதிகளுக்கு கருத்தரிப்பு தொடர்பான இலவச சிறப்பு ஆலோசனை முகாம் கடலுார் கண்ணன் மருத்துவமனையில் நடந்தது.கடலுார், மஞ்சு கிளினிக்ஸ், மகளிர் மகப்பேறு மருத்துவம், கண்ணன் மருத்துவமனை மற்றும் நோவா ஐ.வி.எப். பெர்டிலிட்டி சென்டர் இணைந்து நடத்திய இலவச சிறப்பு கருத்தரிப்பு ஆலோசனை முகாம் நடந்தது.முகாமில் ஏராளமான குழந்தையின்மை தம்பதிகள் கலந்து கொண்டு எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு, மஞ்சு கிளினிக் நிறுவனர் டாக்டர் மஞ்சு பார்கவி சவுந்தரராஜன் மற்றும் டாக்டர் அம்பிகா தேவி ஆகியோர் ஆலோசனை வழங்கினர். முகாமின் மூலம் பல தம்பதியினர் தெளிவு பெற்றனர்.நோவா, ஐவிஎப் மேலாளர்கள் மனோஜ், பரணி பாபு, கண்ணன் மருத்துவமனை டாக்டர் முருகன் மற்றும் மேலாளர்கள் பாபு, ராம்குமார், லெனின், சங்கர் நாராயணன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி