உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தீயணைப்பு வீரர் துாக்கிட்டு தற்கொலை

தீயணைப்பு வீரர் துாக்கிட்டு தற்கொலை

கடலுார்:கடலுாரில் தீயணைப்பு வீரர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கடலுார் ஆனைக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிபாலன், 26; பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லட்சுமி, தனது குழந்தைகளுடன் நேற்று மதியம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். மாலை திரும்பிவந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிபாலன் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.தகவலறிந்த கடலுார் புதுநகர் போலீசார், மணிபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து, தீயணைப்ப வீரர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ