உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பழனிசாமியை சீண்டி பார்க்க வேண்டாம் அண்ணாமலைக்கு மாஜி அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

பழனிசாமியை சீண்டி பார்க்க வேண்டாம் அண்ணாமலைக்கு மாஜி அமைச்சர் சம்பத் எச்சரிக்கை

கடலுார் முன்னாள் முதல்வர் பழனிசாமியை விமர்சனம் செய்யும் அண்ணாமலை திருந்த வேண்டும் என மாஜி., அமைச்சர் சம்பத் எச்சரித்துள் ளார்.அவரது அறிக்கை:கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் 4 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்து, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கு முகவரி கொடுத்தவர் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி. இதை மறந்து, அவரை பற்றி, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தரம் தாழ்ந்து பேசுவது கண்டனத்திற்குறியது.அடிமட்ட தொண்டனாக இருந்து, கடின உழைப்பால் கட்சியின் பொதுச் செயலாளரான வர் பழனிசாமி. ஆனால் அண்ணாமலை எந்த கஷ்டமும் இல்லாமல் நேரடியாக பொறுப்பிற்கு வந்தவர். பா.ஜ., தலைவராக 3 ஆண்டுதான் இருந்துள்ளார். படிப்பிற்கு ஏற்ற பண்பாடு இல்லாத அவர், ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கவே தகுதியற்றவர். தமிழகத்தில் பா.ஜ., வை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார்.வரும் 2026 சட்டசபை தேர்தலில் நான்காவது இடத்திற்கு யார் வருகிறார்கள் என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும். இதற்குமேலும், பழனிசாமியை, அண்ணாமலை சீண்டினால், அ.தி.மு.க., தொண்டர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை