உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கஞ்சா வியாபாரி குண்டாசில் கைது

கடலுார்: விருத்தாசலத்தில் கஞ்சா வழக்கில் கைதான வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.விருத்தாசலம் அடுத்த கொடுக்கூரைச் சேர்ந்தவர் பூபதி மகன் இந்தியன், 29; கஞ்சா வியாபாரி. இவரை விருத்தாசலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு, எஸ்.பி., ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இந்தியனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலுார் மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் இந்தியன் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை