உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்

சாலையோரம் வீசப்பட்ட குப்பை தொட்டிகள்

கடலுார் : கடலுாரில் சாலையோரத்தில் வீசப்பட்டுள்ள குப்பை தொட்டிகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் நாள்தோறும் 20 முதல் 30 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பை கொட்ட முறையான இடம் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகம் அவதிப்படுகிறது. நகரில் குப்பைகள் முழுவதையும் அப்புறப்படுத்த இடமில்லாததால், ஆங்காங்கே குப்பைகள் தேங்கி கிடக்கிறது. மேலும், பல இடங்களில் குப்பை தொட்டி இல்லாததால் சாலையில் பொதுமக்கள் குப்பைகளை வீசி செல்கின்றனர். இந்நிலையில், கடலுார் சில்வர் பீச் பகுதியில் சாலையோரத்தில் குப்பை தொட்டிகள் பயன்பாடின்றி காட்சிப்பொருளாக குவிந்து கிடக்கிறது.எனவே, சாலையோரத்தில் பயன்பாடின்றி உள்ள குப்பை தொட்டிகளை மாநகராட்சியின் குடியிருப்பு பகுதிகளில் வைத்து குப்பை சேகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி