உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பைகளுக்கு தீ வைப்பு புவனகிரியில் பரபரப்பு

குப்பைகளுக்கு தீ வைப்பு புவனகிரியில் பரபரப்பு

புவனகிரி: புவனகிரியில், பேரூாட்சி உரம் தயாரிப்பு கூடத்தில், குப்பைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.புவனகிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், உரம் தயாரிக்கப்படுகிறது. வெள்ளாளற்றங்கரையில் ஷெட்டுடன், கூடாரம் அமைத்து பணிகள் நடக்கிறது. இந்நிலையில், உரம் தயாரிப்பு கூடம் அருகே சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.தகவலறிந்த சிதம்பரம் தீயணைப்பு வீரரகள் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வெளிப்பகுதி மற்றும் முட்புதற்கள் என நேற்று காலை வரை எரிந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து புவனகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி