உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கூட்டுறவு சிக்கன நாணய  சங்க பொதுக்குழுக் கூட்டம்

கூட்டுறவு சிக்கன நாணய  சங்க பொதுக்குழுக் கூட்டம்

கடலுார்: தமிழ்நாடு மாநில பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள்கூட்டமைப்பின்மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் கடலுாரில் நடந்தது.மாவட்டத் தலைவர் கணபதி தலைமை தாங்கினார். முன்னாள் மாநில கவுரவத் தலைவர் பரமாத்மா, மாநிலத் தலைவர் சம்பத் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.பணியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் வரும் 13ம் தேதி காலை 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது. அடுத்தக் கட்டமாக மாநில அளவில் சென்னையில் வரும் 28ம் தேதி நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் குடும்பத்துடன் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளராக தமிழன், கவுரவ தலைவராக குமரேசன், இணை செயலாளராக ராதாகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினராக ஆனந்தபாண்டியன் தேர்வு செய்யப்பட்டனர்.நீலோற்பவமேரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ