உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

கிள்ளை அரசு பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு

கிள்ளை: சிதம்பரத்தில், சாரண சாரணியர் இயக்கம் சார்பில் மாவட்ட அளவில் திரிதியசோபன் தேர்வு நடந்தது. இதில், கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆரியா, ராகவன், தீபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பள்ளியில் நேற்று பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கிள்ளை சப் இன்ஸ்பெக்டர்சங்கர் பரிசு வழங்கினார்.சாரணிய ஆசிரியர் சுபசித்ராங்கி மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.சாரண ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ