சிறுமிகள் கர்ப்பம்; 2 பேருக்கு போக்சோ
விருத்தாசலம்,: விருத்தாசலம் பகுதியில் சிறுமிகளை திருமணம் செய்து கர்ப்பமாக்கி இருவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.விருத்தாசலம் அடுத்த சத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை, 24. இவர் 17 வயது சிறுமியை கடந்தாண்டு திருமணம் செய்துள்ளார். கர்ப்பமடைந்த சிறுமிக்கு, கடந்த 6ம் தேதி, சிதம்பரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.மற்றொரு வழக்கு: அதேபோல், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி,29; பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியுள்ளார்.இதுகுறித்த புகார்களின் பேரில், ராஜதுரை மற்றும் மூர்த்தி ஆகியோர் மீது விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.