உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை முத்துக்குமாரசாமி கோவிலில், வடலுார் சத்திய தருமச்சாலை 158 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கலந்தாய்வு நிகழ்ச்சி நடந்தது.கிள்ளை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் பேரொளி தவச்சாலைசேவை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார். நிர்வாக செயலாளர் பாலாஜி, ராம் செல்லையா முன்னிலை வகித்தனர். சிவாலய ஓதுவார் முத்துக்குமாரசாமி, சங்க நிறுவனர் பரசுபானந்தா, வடலுார் ஜோதி முருகன் ஆகியோர் ஆன்மிக சொற்பொழிவாற்றினர்.எஸ்.பி., ராஜாராம் பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், வழக்கறிஞர்கள் ஜெயச்சந்திரன், மணிமாறன், நிர்வாகிகள் ஜெய்சங்கர், கற்பகம், சீனிவாசன், கொளஞ்சி, ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை